தமிழ் வீற்றிரு யின் அர்த்தம்

வீற்றிரு

வினைச்சொல்வீற்றிருக்க, வீற்றிருந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உட்கார்ந்திருத்தல்; அமர்ந்திருத்தல்.

    ‘அரியணையில் அரசர் வீற்றிருந்த காலம் அது’
    உரு வழக்கு ‘நாகரிகத்தின் உச்சியில் வீற்றிருப்பதாக நினைத்துக்கொள்கிறோம்’
    உரு வழக்கு ‘என் இதயத்தில் அவள் வீற்றிருக்கிறாள்’