தமிழ் வற்று யின் அர்த்தம்

வற்று

வினைச்சொல்வற்ற, வற்றி

 • 1

  (ஊற்று குறைவதால் அல்லது வெயிலின் கடுமையால் நீரின்) அளவு குறைதல்; (நீர்) இல்லாமல் போதல்.

  ‘குளத்தில் நீர் வற்றிக்கொண்டே வருகிறது’
  ‘ஊற்று வற்றிப்போனதால் கிணற்றில் சுத்தமாகத் தண்ணீர் இல்லை’
  உரு வழக்கு ‘இப்போதைய திரைப்பட இயக்குநர்களுக்கெல்லாம் கற்பனை வற்றிக்கொண்டேவருகிறது’

 • 2

  (பால், கண்ணீர் முதலியவை) சுரப்பது நிற்றல்.

  ‘அழுதுஅழுது கண்ணீர் வற்றிவிட்டது’
  ‘பசுவிடம் பால் வற்றிவிட்டது’

 • 3

  (வீக்கம், கட்டி முதலியவை) உள் அமுங்குதல்; வடிதல்.

  ‘மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடுங்கள்; வீக்கம் வற்றிவிடும்’

 • 4

  (உடல்) மெலிதல்.

  ‘உடல் வற்றி, பார்க்கப் பரிதாபமாக இருந்தான்’