தமிழ் வறள் யின் அர்த்தம்

வறள்

வினைச்சொல்வறள, வறண்டு

 • 1

  (ஒரு பகுதியில் அல்லது நீர்நிலையில் நீர்) வற்றுதல்.

  ‘மழை இல்லாமல் விளைநிலங்கள் வறண்டுகிடந்தன’
  ‘பெரும்பாலான வறண்ட நிலத் தாவரங்களில் முட்கள் இருக்கும்’
  ‘(உருவ.) கதாசிரியருக்குக் கற்பனை வறள ஆரம்பித்துவிட்டது’

 • 2

  (நாக்கு, தொண்டை, தோல் போன்றவை) ஈரத்தன்மையற்றுப் போதல்; உலர்தல்.

  ‘அவன் உதடுகள் வறண்டு வெடித்திருந்தன’
  ‘வறண்ட சருமம்’
  ‘பேசிப்பேசி எனக்குத் தொண்டை வறண்டுவிட்டது’