தமிழ் வீறாப்பு யின் அர்த்தம்

வீறாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (செயலில் இல்லாமல்) பேச்சில் மட்டும் வீரத்தையும் தன்மானத்தையும் காட்டும் தன்மை.

    ‘‘அடுத்தவனிடம் கைகட்டி வேலை பார்க்கமாட்டேன்’ என்று உன் வீட்டுக்காரர் வீறாப்பாகப் பேசிக்கொண்டிருந்தால் வருமானத்துக்கு என்னதான் செய்வது?’

  • 2

    வீம்பு; பிடிவாதம்.

    ‘ஒரு சின்னப் பிரச்சினைக்காகச் சொந்தப் பையனிடம் போய் வீறாப்பு காட்டலாமா?’