தமிழ் வறு யின் அர்த்தம்

வறு

வினைச்சொல்வறுக்க, வறுத்து

 • 1

  வாணலியில் போட்டு (எண்ணெய் ஊற்றாமல்) சூட்டில் காயச் செய்து தேவையான பதத்துக்குக் கொண்டுவருதல்.

  ‘உப்புமா செய்வதற்கு முன் ரவையை வறுத்துக்கொள்ளவும்’
  ‘காப்பிக் கொட்டை வறுக்கும் வாசம்!’
  ‘நிலக்கடலையை வறுத்துத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்’

 • 2

  (உணவாகும் பொருளை எண்ணெயில்) பொரித்தல்.

  ‘‘கொஞ்சம் வடகம் வறுத்துப் போடு’ என்று அம்மாவிடம் கேட்டான்’
  ‘சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள மீன் வறுத்திருக்கிறேன்’

தமிழ் வீறு யின் அர்த்தம்

வீறு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு எழுச்சி.

  ‘மக்கள் வீறுகொண்டு எழுந்தனர்’
  ‘நம் அணியினர் பிற்பகுதியில் வீறுகொண்டு ஆடினர்’
  ‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் இவர் வீறு மிக்க பல நாடகங்களை நடத்தினார்’