வலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலி1வலி2வலி3வலி4வலி5

வலி1

வினைச்சொல்வலிக்க, வலித்து

 • 1

  (உடம்பில் அல்லது ஏதேனும் ஒரு உறுப்பில்) வேதனை தரும் உணர்வு உண்டாதல்.

  ‘எனக்குக் கடுமையாகத் தலையை வலிக்கிறது’
  ‘மருத்துவர் ஊசி குத்தும்போது எறும்பு கடிப்பது போலத்தான் வலிக்கும் என்று குழந்தையைச் சமாதானப்படுத்தினாள்’
  ‘பல் கூசுகிறதா, வலிக்கிறதா?’
  ‘கால் வலிக்க வரிசையில் நிற்கவேண்டியிருந்தது’

வலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலி1வலி2வலி3வலி4வலி5

வலி2

வினைச்சொல்வலிக்க, வலித்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (துடுப்பு, கயிறு முதலியவற்றை) இழுத்தல்.

  ‘துடுப்பு வலிப்பதற்குப் பழக்கம் வேண்டும்’
  ‘கயிற்றை இடது பக்கமாக வலித்து விடுங்கள்’

 • 2

  வட்டார வழக்கு (முகத்தைக் கோணி) அழகு காட்டுதல்.

  ‘தம்பி என்னைப் பார்த்து வலிக்கிறான்’

வலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலி1வலி2வலி3வலி4வலி5

வலி3

பெயர்ச்சொல்

 • 1

  (உடம்பில் அல்லது ஏதேனும் ஒரு உறுப்பில் ஏற்படும்) வேதனை தரும் உணர்வு.

  ‘உடம்பு வலி தீர வெந்நீரில் குளித்தான்’
  ‘சாதாரண நெஞ்சு வலி என்று அலட்சியமாக இருந்துவிட்டார்’
  ‘கால் வலியைப் பொறுத்துக்கொண்டு மேலும் நடந்தான்’
  ‘பல் வலி’

வலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலி1வலி2வலி3வலி4வலி5

வலி4

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு வலிமை.

  ‘வலி படைத்த தோள்’

வலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலி1வலி2வலி3வலி4வலி5

வலி5

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வலிப்பு.

  ‘கடைக்குப் போகும்போது வலி வந்து சாலையில் விழுந்துவிட்டார்’
  ‘ஜுரம் அதிகமானதால் குழந்தைக்கு வலி வந்துவிட்டது’