தமிழ் வலிந்து யின் அர்த்தம்

வலிந்து

வினையடை

 • 1

  வேண்டுமென்றே; வலுக்கட்டாயமாக.

  ‘ஒரு மொழியில் பிற மொழிச் சொற்களை வலிந்து புகுத்துவது தவறு’
  ‘எதிலாவது வலிந்து ஈடுபடுத்திக்கொள், கவலையை மறக்கலாம்’
  ‘அவனை எதிரில் சந்தித்ததும் வலிந்து ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டாள்’

 • 2

  வலிய.

  ‘அவன் வலிந்து வந்து பேசினாலும் நான் அவனோடு பேச மாட்டேன்’