தமிழ் வலிமை யின் அர்த்தம்
வலிமை
பெயர்ச்சொல்
- 1
(ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய) சக்தி; திறன்; பலம்.
‘அவன் வலிமையும் திறமையும் உள்ளவன்’‘வலிமை மிக்க நாடுகளோடு நாம் பல துறைகளில் போட்டிபோட வேண்டியிருக்கிறது’‘ராணுவ வலிமையைப் பெருக்குவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்’‘திரைப்படம் ஒரு வலிமை மிகுந்த ஊடகமாகும்’‘காலத்தை வென்று நிற்கும் வலிமை படைத்த இலக்கியம்’‘எங்கள் கட்சியின் வலிமையை அவர் தவறாகக் கணித்துவிட்டார்’ - 2
உறுதி.
‘இந்தப் பற்பசை பற்களுக்குப் பளபளப்பும் வலிமையும் தரும்’‘எனது மன வலிமையைச் சோதிப்பது போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது’