தமிழ் வலிய யின் அர்த்தம்

வலிய

வினையடை

 • 1

  (பிறரின் வேண்டுகோளின்படி இல்லாமல் ஒருவர்) தானாகவே முன்வந்து.

  ‘அவர் வலிய வந்து உதவி செய்தார்’
  ‘புதிதாகப் பக்கத்து அறைக்கு வந்தவரிடம் வலியச் சென்று பேசினேன்’

 • 2

  பலவந்தமாக; வலிந்து.

  ‘தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டான்’
  ‘வலிய வரவழைத்துக்கொண்ட சிரிப்பு’