வலு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலு1வலு2வலு3

வலு1

வினைச்சொல்வலுக்க, வலுத்து

 • 1

  (ஒன்று தற்போது இருக்கும் நிலையைவிட) அதிகரித்தல்; பலம் பெறுதல்.

  ‘மழை வலுத்துவிட்டது’
  ‘அவர்களுக்குள் சண்டை வலுக்கும் போலத் தெரிகிறது’
  ‘பிரச்சினையை வலுக்கவிடாமல் தீர்த்துவிட்டார்’

வலு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலு1வலு2வலு3

வலு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வலிமை; பலம்; உறுதி.

  ‘வேகமாக ஓடும் அளவுக்குக் கால்களில் வலு இருந்தது’
  ‘வலுவான கரங்கள்’
  ‘இந்தக் கட்டடத்திற்கான அஸ்திவாரம் வலுவாகப் போடப்பட்டிருக்கிறது’

 • 2

  தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை.

  ‘குற்றத்திற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன’
  ‘வலுவான ஆதாரம்’
  ‘நீ சொல்லும் காரணம் வலுவுடையதாக இல்லை’
  ‘சோழ மன்னன் இறுதிவரை வலுவாகப் போரிட்டான்’
  ‘ஒத்துழையாமை இயக்கத்தை வலுவாக முன்னெடுத்துச்செல்ல காந்தி விரும்பினார்’
  ‘‘மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் இடையில் இருப்பது என்ன உறவு?’ என்ற கேள்வியை இந்த நாவல் வலுவாக எழுப்புகிறது’

வலு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வலு1வலு2வலு3

வலு3

இடைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ‘படு’, ‘மிகவும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவன் வலு வேகமாக சைக்கிள் ஓட்டுகிறான்’
  ‘அவன் வலு கெட்டிக்காரன்’