தமிழ் வலுக்கட்டாயமாக யின் அர்த்தம்

வலுக்கட்டாயமாக

வினையடை

 • 1

  (விருப்பமில்லாத ஒன்றைச் செய்வதற்கு ஒருவரை) மிகவும் வற்புறுத்தி; நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கி; கட்டாயப்படுத்தி; (குறிப்பிட்ட கருத்து போன்றவற்றை வெளிப்படுத்துவதைக் குறித்துவரும் போது) வலிந்து; வேண்டுமென்றே.

  ‘சாப்பிடுவதற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றார்’
  ‘ஒரு மொழியினரிடம் மற்றொரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது’
  ‘ஒவ்வாத மரபுகளை வலுக்கட்டாயமாகப் பின்பற்றுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்’
  ‘என்னைத் திடீரென்று சந்தித்ததும் வலுக்கட்டாயமாகப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவள் நலம் விசாரித்தாள்’
  ‘இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லாதபோதிலும் வலுக்கட்டாயமாக எல்லோரும் என்னைச் சம்மதிக்கவைத்தார்கள்’