தமிழ் வலை யின் அர்த்தம்

வலை

பெயர்ச்சொல்

 • 1

  (கயிறு, இழை, கம்பி போன்றவற்றால்) ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்.

  ‘கடலில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்’
  ‘இரும்பு வலை வைத்து அடிக்கப்பட்ட அலமாரி’
  ‘மேலிருந்து விழுந்தாலும் காயம்படாத அளவுக்குக் கீழே வலை கட்டப்பட்டிருந்தது’

 • 2

  சிலந்தி வலை.

  ‘கூரையில் சிலந்தி அழகாக வலை பின்னியிருந்தது’