தமிழ் வல்லமை யின் அர்த்தம்

வல்லமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பெரும் வலிமை.

  ‘ராணுவ வல்லமை உள்ள நாடு’
  ‘சர்வ வல்லமை படைத்த இறைவா!’

 • 2

  உயர் வழக்கு (ஒன்றை நிகழ்த்தக் கூடிய) ஆற்றல்; சக்தி; திறன்.

  ‘இவை கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்ட ஏவுகணைகள்’