தமிழ் வளாகம் யின் அர்த்தம்

வளாகம்

பெயர்ச்சொல்

 • 1

  (அளவில் பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள் முதலியவற்றின்) சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி.

  ‘நீதிமன்ற வளாகம்’
  ‘பல்கலைக்கழக வளாகம்’
  ‘கல்லூரி வளாகம்’

 • 2

  வியாபாரத்திற்கோ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கோ அமைக்கப்பட்ட கட்டடத் தொகுப்புள்ள பகுதி.

  ‘ஒரே வளாகத்தில் மூன்று திரையரங்குகள் உள்ளன’
  ‘வர்த்தக வளாகம்’