வளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளை1வளை2வளை3வளை4வளை5

வளை1

வினைச்சொல்வளைய, வளைந்து, வளைக்க, வளைத்து

 • 1

  (குச்சி, கம்பி, கோடு போன்றவை) நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடங்குதல்/(உடல்) உட்புறமாக மடங்குதல்.

  ‘ஆணி வளைந்துவிட்டது’
  ‘பாம்பு வளைந்துவளைந்து சென்றது’
  ‘கோடு நேராக இல்லாமல் வளைந்திருந்தது’
  ‘யானையின் தந்தம் லேசாக வளைந்திருக்கும்’
  ‘ஒலியைப் போல் வளைந்து ஊடுருவும் தன்மை ஒளிக்குக் கிடையாது’
  ‘ஒரு கால் மட்டும் அவருக்கு லேசாக வளைந்திருக்கும்’

 • 2

  (சாலை, ஆறு போன்றவை) திரும்புதல்.

  ‘மலைப் பிரதேசங்களில் சாலைகள் வளைந்துவளைந்து செல்கின்றன’
  ‘ஓடை வளைந்து ஒரு காட்டுக்குள் சென்றது’

 • 3

  ஒரு வேலையைச் செய்வதற்கு உடல் தயாராக இருத்தல்.

  ‘கடின வேலை செய்வதற்கு என் உடம்பு வளையாது’

 • 4

  (ஒருவருடைய விருப்பத்துக்கு இன்னொருவர்) இணங்குதல்; வளைந்துகொடுத்தல்.

  ‘எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், ஆள் வளைய மாட்டான் போலிருக்கிறது’

வளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளை1வளை2வளை3வளை4வளை5

வளை2

வினைச்சொல்வளைய, வளைந்து, வளைக்க, வளைத்து

 • 1

  வளையச் செய்தல்.

  ‘கிளையை வளைத்து இலை பறித்தான்’
  ‘கம்பியை இன்னும் கொஞ்சம் வளை’
  ‘கைகளை மேலே தூக்கி உடலை வில்போல் வளைக்க வேண்டும்’
  ‘வில்லை வளைத்து அம்பை எய்தான்’
  ‘ஜன்னல் கம்பிகளை வளைத்துத் திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர்’
  ‘இடுப்பை வளைக்காமல் நேராக நில்’
  ‘மெய்யெழுத்துக்கு மேல் போடும் சுழியை இன்னும் கொஞ்சம் வளைத்து எழுது’

 • 2

  (வாகனத்தை) திருப்புதல்.

  ‘வண்டியை இடது பக்கம் வளைத்து ஒரு ஓரமாக நிறுத்து’

 • 3

  (ஒருவரையோ ஒரு கூட்டத்தையோ தப்ப முடியாதபடி) சூழ்ந்து மடக்குதல்.

  ‘சுங்கத் துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களை வளைத்துப்பிடித்தனர்’
  ‘வீட்டை விட்டு வெளியே வந்தபோது அவரை ரவுடிகள் வளைத்துக்கொண்டு தாக்கினார்கள்’
  ‘அந்நியத் துருப்புகளை இந்தியப்படை வளைத்தது’

வளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளை1வளை2வளை3வளை4வளை5

வளை3

பெயர்ச்சொல்

 • 1

  (எலி, நண்டு முதலியவை) தரையில் குடைந்து ஏற்படுத்தும் நீளமான பொந்து.

  ‘கடற்கரை ஓரங்களில் வளை தோண்டி நண்டு வாழும்’
  ‘வரப்பில் உள்ள எலி வளைகளைச் சேற்றைக் கொண்டு மூட வேண்டும்’

வளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளை1வளை2வளை3வளை4வளை5

வளை4

பெயர்ச்சொல்

உயர் வழக்கு

வளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளை1வளை2வளை3வளை4வளை5

வளை5

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கூரைச் சட்டத்தை அமைக்கச் சுவரின் மேல்பகுதியிலும் முகட்டிலும் வைக்கும் நீளமான மரக் கட்டை.

  ‘நீ நல்ல வயிரமான பனையில் வளை அடித்துத் தர வேண்டும்’