தமிழ் வளைந்துகொடு யின் அர்த்தம்

வளைந்துகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (விட்டுக்கொடுத்து) இணக்கமாகப் போதல்/(விருப்பம் இல்லாவிட்டாலும்) ஒத்துப்போதல்.

  ‘குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கும். எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுத்துதான் போக வேண்டியிருக்கிறது’
  ‘தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அரசு வளைந்துகொடுக்காது’
  ‘நான் யாருக்கும் வளைந்துகொடுக்க வேண்டிய அவசியமில்லை’
  ‘இந்தக் காலத்தில் வளைந்துகொடுத்துப் போனால்தான் பிழைக்க முடியும்’