தமிழ் வீழ் யின் அர்த்தம்

வீழ்

வினைச்சொல்வீழ, வீழ்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு விழுதல்.

  ‘நெஞ்சில் அம்பு பாய்ந்ததும் அந்தப் போர் வீரன் குதிரையிலிருந்து கீழே வீழ்ந்தான்’

 • 2

  உயர் வழக்கு தோல்வியடைதல்; வீழ்ச்சி அடைதல்.

  ‘அலெக்ஸாண்டரின் படையெடுப்பால் நாடுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன’
  ‘சர்வாதிகாரம் வீழ்ந்து அந்த நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தது’
  ‘செரினா வில்லியம்ஸிடம் ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா வீழ்ந்தார்’

 • 3

  உயர் வழக்கு (விக்கெட்) சாய்தல்; விழுதல்.

  ‘டெண்டுல்கருடைய விக்கெட் வீழ்ந்ததும் இலங்கை அணியினர் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்’