தமிழ் வழக்கம் யின் அர்த்தம்

வழக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட சமூகம், மதம், ஜாதி போன்றவற்றில்) அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை; சம்பிரதாயம்.

  ‘நெருங்கிய உறவில் பெண் கொடுப்பது எங்கள் பக்கத்தில் வழக்கம் இல்லை’

 • 2

  (-ஆக, -ஆன) குறிப்பிட்ட முறையில் பல முறை தொடர்ந்து செய்வதால் பழக்கமாகிப்போவது.

  ‘நான் வழக்கமாகச் சாப்பிடும் இடம்’
  ‘வழக்கமான பாதையிலேயே இன்றும் போவோம்’
  ‘ஆண்டுதோறும் தீபாவளி மலர் வெளியிடுவது எங்கள் பத்திரிகையின் வழக்கம்’
  ‘அவருக்கு நள்ளிரவில் வழக்கத்துக்கு மாறாக விழிப்பு ஏற்பட்டதால் மீண்டும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார்’
  ‘ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோயிலுக்குப் போவது அவனுடைய வழக்கம்’
  ‘எங்கள் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு முதலில் எளிதான வேலைகளைக் கொடுப்பதுதான் வழக்கம்’
  ‘வழக்கமாக அவர் புத்தகங்களை இரவல் வாங்கித்தான் படிப்பார்’

தமிழ் வழக்கம் யின் அர்த்தம்

வழக்கம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கை, கால் முதலியவற்றின்) இயக்கம்.

  ‘அவருக்குக் கால் ஒன்று வழக்கம் இல்லை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு புழக்கம்.

  ‘எனக்கு இடது கைதான் வழக்கம்’