வழக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழக்கு1வழக்கு2

வழக்கு1

பெயர்ச்சொல்

 • 1

  சொத்து போன்றவற்றின் உரிமை குறித்தோ குறிப்பிட்ட குற்றம் செய்தது யார் என்பதைக் குறித்தோ நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகக் கொண்டுவரப்படும் பிரச்சினை.

 • 2

  ஒரு குற்றம் சம்பந்தமாகக் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை.

  ‘நிதி நிறுவன மோசடி தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது’
  ‘இந்தக் கொலை வழக்கில் இன்னும் துப்புத் துலங்கவில்லை’

 • 3

  பேச்சு வழக்கு தகராறு; வாதம்.

  ‘உங்கள் வழக்கைத் தீர்க்க எனக்கு நேரம் இல்லை’

வழக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழக்கு1வழக்கு2

வழக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  மக்களால் பின்பற்றப்படுவதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது; புழக்கம்.

  ‘நீங்கள் குறிப்பிடும் பல வார்த்தைகள் இப்போது வழக்கில் இல்லை’
  ‘வழக்கில் உள்ள நடைமுறை இதுதான்’

 • 2

  மொழி வழங்கிவரும் முறை.

  ‘பேச்சு வழக்கு’
  ‘எழுத்து வழக்கு’
  ‘வட்டார வழக்கு’