வழங்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழங்கு1வழங்கு2

வழங்கு1

வினைச்சொல்வழங்க, வழங்கி

 • 1

  கொடுத்தல்; அளித்தல்.

  ‘இந்தப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது’
  ‘விழாவுக்குத் தலைமை வகித்துப் பரிசு வழங்கினார்’
  ‘குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’
  ‘இந்த நாடகத்தின் மூலம் பல நல்ல கருத்துகளை வழங்க முடிந்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம்’
  ‘இந்தக் கூட்டுறவு சங்கம் விவசாயிகளுக்குக் கடன் வழங்குகிறது’
  ‘இயற்கை நமக்குப் பல அரிய செல்வங்களை வழங்கியுள்ளது’
  ‘விழாவில் பேசியவர் மாணவர்களுக்குப் பல நல்ல யோசனைகளை வழங்கினார்’
  ‘பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்’
  ‘கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது’
  ‘அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன’
  ‘சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவுக்குப் பொருளுதவி வழங்கப் பல நாடுகள் முன்வந்தன’

 • 2

  (நிகழ்ச்சி, படைப்பு முதலியவற்றை) உருவாக்கிப் பார்வையாளர்களுக்குத் தருதல்.

  ‘மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்’
  ‘தீபாவளியை முன்னிட்டு எல்லாத் தொலைக்காட்சிகளும் பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளன’

 • 3

  (தொலைக்காட்சி, வானொலி முதலியவற்றில் ஒரு நிறுவனம் நிகழ்ச்சியைத் தன் செலவில்) நடத்த முன்வருதல்.

  ‘இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியவர்கள் சக்தி மசாலா’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (கால், கை முதலியவை) இயங்குதல்.

  ‘கால் கை வழங்காமல் போயிற்று’

வழங்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழங்கு1வழங்கு2

வழங்கு2

வினைச்சொல்வழங்க, வழங்கி

 • 1

  (மொழி, சொல், கதை முதலியவை) பயன்பாட்டில் அல்லது புழக்கத்தில் இருத்தல்.

  ‘இந்தச் சொல் என்ன பொருளில் வழங்குகிறது?’

 • 2

  குறிப்பிடுதல்.

  ‘இந்தியாவை பாரதம் என்றும் வழங்குகிறோம்’