தமிழ் வீழ்த்து யின் அர்த்தம்

வீழ்த்து

வினைச்சொல்வீழ்த்த, வீழ்த்தி

 • 1

  (தள்ளுதல், வெட்டுதல், சுடுதல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரை) கீழே விழச் செய்தல்.

  ‘மரத்தை வெட்டி வீழ்த்தினான்’
  ‘விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது’

 • 2

  தோல்வியடையச் செய்தல்.

  ‘முதல் சுற்று ஆட்டத்திலேயே முன்னணி ஆட்டக்காரரை வீழ்த்திவிடும் இளம் வீரர்களும் உண்டு’
  ‘திட்டமிட்டு எதிரிகளை வீழ்த்த வேண்டும்’
  ‘இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது’
  ‘கூடைப்பந்துப் போட்டியில் தமிழக அணி மேற்கு வங்க அணியை வீழ்த்தியது’

 • 3

  (கிரிக்கெட்டில்) (பந்து வீச்சாளர் எதிரணி வீரரின் விக்கெட்டை) சாய்த்தல்.

  ‘அபாரமாகப் பந்து வீசி பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’