வழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழி1வழி2வழி3

வழி1

வினைச்சொல்வழிய, வழிந்து, வழிக்க, வழித்து

 • 1

  (அணை, ஏரி, குளம் போன்ற நீர்நிலையில் அல்லது ஒரு கொள்கலனில் நீர் போன்ற திரவம்) நிரம்பி வடிதல்; (பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல்.

  ‘அணையில் நீர் வழிந்தது’
  ‘மழை அதிகமானதால் முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்தது’
  ‘அடுப்பிலிருந்த பால் பொங்கி வழிந்தது’
  உரு வழக்கு ‘உணர்ச்சி பொங்கி வழிந்தது’

 • 2

  (வியர்வை, இரத்தம் போன்றவை உடலி லிருந்து) கொஞ்சம்கொஞ்சமாக வெளிவருதல்.

  ‘அம்மா அடுப்படியில் வியர்வை வழிய நின்றுகொண்டிருந்தாள்’
  ‘அக்கா கண்ணீர் வழிய நின்றாள்’
  ‘காயத்திலிருந்து இரத்தம் வழிவது நிற்கவில்லை’

 • 3

  பேச்சு வழக்கு (ஒருவருடைய மதிப்பு, கவனம், பிரியம் போன்றவற்றைப் பெறுவதற்காக) அசட்டுத்தனமாகக் குழைதல்.

  ‘அவளிடம் நீ ஏன் இப்படி வழிகிறாய்?’

வழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழி1வழி2வழி3

வழி2

வினைச்சொல்வழிய, வழிந்து, வழிக்க, வழித்து

 • 1

  (மாவு, சந்தனம் போன்றவற்றை எடுக்கையில் அவை இருக்கும்) பரப்பில் (கையை அல்லது கரண்டியை) ஒட்டி வைத்து இழுத்து எடுத்தல்.

  ‘பாத்திரத்தில் ஒட்டியிருந்த மாவைக் கையால் வழித்துத் தோசைக்கல்லில் விட்டாள்’
  ‘மஞ்சளை வழித்து முகத்தில் பூசிக்கொண்டாள்’

 • 2

  வட்டார வழக்கு (முடியை) அடியோடு எடுத்தல்; மழித்தல்.

  ‘முகம் வழித்த பின் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்’

 • 3

  வட்டார வழக்கு (வேட்டியின் அல்லது புடவையின் விளிம்புகளைப் பிடித்து) மேலே இழுத்துக்கொள்ளுதல்.

  ‘ஆற்றில் இறங்கும் முன் வேட்டியை வழித்துக்கொண்டான்’

வழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வழி1வழி2வழி3

வழி3

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் சொல்; பாதை.

  ‘கோயிலுக்குச் செல்லும் வழி’
  ‘திருச்சி வழியாகக் கோயம்புத்தூர் செல்லும் பேருந்து’
  ‘சுரங்கத்துக்குள் செல்வதற்கான வழி அடைபட்டுள்ளது’
  ‘அந்தக் கோட்டையில் பல ரகசிய வழிகள் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்’
  ‘‘வழியில் நிற்காமல் ஓரமாக நின்று பேசினால் என்ன?’ என்று ஒருவர் அவர்களைத் திட்டிவிட்டுப் போனார்’

 • 2

  (உறவுகுறித்து வருகையில்) குறிப்பிட்டவர்மூலம் ஏற்படுவது.

  ‘அவர் எனக்கு அம்மா வழியில் உறவு’

 • 3

  (கட்டடம், பேருந்து போன்றவற்றில்) இறங்க, ஏற, உள்ளே சென்று வர, நடக்கப் பயன்படுத்தும் திறப்பு/(காற்று, வெளிச்சம் போன்றவை) வர அமைக்கப்பட்டிருக்கும் சிறிய திறப்பு.

 • 4

  (ஒருவர்) செயல்படும் முறை; போக்கு.

  ‘நீ உன் வழியில் போய்க்கொள், என்னை ஒன்றும் கேட்காதே’

 • 5

  (பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும்) தீர்வு; உபாயம்.

  ‘உடனடியாக ஆயிரம் ரூபாய் வேண்டும், அதற்கு ஒரு வழி சொல்’
  ‘இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? ஒரு வழியும் புலப்படவில்லையே!’
  ‘என் பையனுக்கு இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. நீங்கள்தான் அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டும்’