தமிழ் வழிக்குக்கொண்டுவா யின் அர்த்தம்

வழிக்குக்கொண்டுவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    உரிய முறையை அல்லது ஒழுங்கைப் பின்பற்றி அல்லது தான் விரும்பும் விதத்தில் ஒருவரை நடக்கச்செய்தல்.

    ‘ஒழுங்காகப் படிக்காத மகனை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்று யோசித்தாள்’
    ‘கட்சியின் மாவட்ட தலைவரைத் தன் வழிக்குக்கொண்டுவந்துவிட்டால் தேர்தலில் நிற்கச் சீட்டு கிடைத்துவிடும் என்று எண்ணினார்’