தமிழ் வழிகாட்டு யின் அர்த்தம்

வழிகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று பின்பற்றத் தகுந்த வகையில் சுட்டிக்காட்டுதல்.

    ‘புதிய இந்தியாவைப் படைப்பதில் வழிகாட்டியவர்களில் நேருவும் ஒருவர்’
    ‘இந்த ஆய்வு நூலைச் செம்மையாக எழுதி முடிப்பதில் எனக்கு வழிகாட்டிய எனது ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி!’
    ‘மண்புழு உரத்தை எப்படித் தயார் செய்வது என்பதற்கு இந்த நூல் வழிகாட்டும்’