தமிழ் வழிநடத்து யின் அர்த்தம்

வழிநடத்து

வினைச்சொல்

  • 1

    ஒரு இயக்கம், குழு போன்றவற்றுக்குத் தலைமைதாங்கி நடத்துதல்; ஒருவர் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டி அவரைக் குறிப்பிட்ட முறைப்படி நடக்கச்செய்தல்.

    ‘விடுதலைப் போராட்டக் காலத்தில் நம்மை வழிநடத்திச் சென்றவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை’
    ‘கட்சியை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்ற பெருமை நமது தலைவரையே சாரும்’
    ‘அம்மாவின் அறிவுரைகள்தான் இதுவரை என்னை வழிநடத்திவந்திருக்கின்றன’