தமிழ் வழிமுறை யின் அர்த்தம்

வழிமுறை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை) முறையாகச் செய்வதற்காகவோ பின்பற்றுவதற்காகவோ இருக்கும் வழி.

  ‘ஆலைக் கழிவுகளிலிருந்து நச்சுத் தன்மையை நீக்குவதற்கான வழிமுறைகள் ஆராயப்படுகின்றன’
  ‘காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கச் சில வழிமுறைகள் உள்ளன’
  ‘மண் அரிப்பைத் தடுக்கச் சில வழிமுறைகளைப் பழங்குடிகள் கையாளுகின்றனர்’
  ‘சட்டத்தின் வழிமுறைகள் மக்கள் அனைவருக்கும் பொதுவானது’
  ‘முதலீடு செய்வதற்கு இன்று எத்தனையோ வழிமுறைகள் உள்ளன’
  ‘இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறை என்ன?’

 • 2

  கணிதம்
  ஒரு கணக்குக்கு அல்லது சமன்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்காகப் படிப்படியாகச் செய்யும் முறை.

  ‘வழிமுறையை ஒழுங்காகச் செய்தாலே விடை தானே வரும்’
  ‘வழிமுறையைத் தவறாகச் செய்துவிட்டு விடையை மட்டும் எப்படிச் சரியாக எழுதினாய் என்று ஆசிரியர் கேட்டார்’