தமிழ் வழிவழியாக யின் அர்த்தம்

வழிவழியாக

வினையடை

  • 1

    (பழக்கவழக்கங்கள், தொழில் முதலியவை தொடர்வதைக் குறிக்கையில்) முதல் தலைமுறையிலிருந்து அடுத்தது என்ற வகையில்; பரம்பரைபரம்பரையாக.

    ‘வழிவழியாக வந்த பழக்கத்தைத் திடீரென்று நிறுத்திவிடுவது கடினம்’
    ‘வழிவழியாகக் கூத்துக் கலையைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள் இப்போது கொஞ்சம்கொஞ்சமாக அதை விட்டு வேறு தொழில்களுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர்’
    ‘வழிவழியாக இவர்களுடைய பரம்பரைக்குத்தான் இந்தக் கோயிலில் முதல்மரியாதை வழங்கப்படுகிறது’