தமிழ் வழிவிடு யின் அர்த்தம்

வழிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    ஒன்று அல்லது ஒருவர் போவதற்குத் தடையாக இல்லாமல், விலகி வழி ஏற்படுத்தித் தருதல்.

    ‘தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த பெண்கள் பெரியவர் எதிர்ப்பட்டதும் வழிவிட்டார்கள்’
    உரு வழக்கு ‘பிரபலக் கால்பந்து வீரர் ஒருவர் தான் இனிப் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் இளம் வீரர்களுக்கு வழிவிட விரும்புவதாகவும் கூறினார்’