தமிழ் வழு யின் அர்த்தம்

வழு

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு (குறிப்பிட்ட ஒழுங்கு, முறை போன்றவற்றிலிருந்து விலகுவதால் ஏற்படும்) தவறு.

    ‘இந்த நாட்டிய மரபை வழுவின்றிப் பின்பற்ற வேண்டும்’

  • 2

    இலக்கணம்
    மரபு, திணை, பால், எண், இடம் முதலியவைபற்றிக் கூறப்படும் இலக்கண விதிகளிலிருந்து மாறி வருவது.