தமிழ் வழுக்கு யின் அர்த்தம்

வழுக்கு

வினைச்சொல்வழுக்க, வழுக்கி

  • 1

    (உராய்வு இல்லாத பரப்பில்) பிடிப்பு இல்லாமல் நழுவிச் சரிதல்/(ஒரு பரப்பு) நழுவிச் சரியச்செய்யக் கூடியதாக இருத்தல்.

    ‘வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தவன் வாழைப்பழத் தோலில் கால் வைத்ததால் வழுக்கி விழுந்தான்’
    ‘பாசி பிடித்திருப்பதால் குளத்துப் படி வழுக்கும், ஜாக்கிரதை!’
    ‘குழந்தை தாயின் இடுப்பிலிருந்து வழுக்கிக் கீழே இறங்கியது’