தமிழ் வழுவு யின் அர்த்தம்

வழுவு

வினைச்சொல்வழுவ, வழுவி

 • 1

  உயர் வழக்கு (உரிய ஒழுங்கு, கொள்கை, கடமை முதலியவற்றிலிருந்து) தவறுதல்.

  ‘ஒருவர் கடமையிலிருந்து வழுவினால் உயர் அதிகாரியாக இருந்தாலும் உரிய தண்டனை பெறுவார்’
  ‘மரபு வழுவாத நாட்டியம்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நழுவுதல்.

  ‘அவள் பின்னல்களில் ஒன்று தோளிலிருந்து வழுவி முன்புறம் தொங்கியது’