தமிழ் வாக்களி யின் அர்த்தம்

வாக்களி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

 • 1

  (தேர்தல் சின்னத்தில்) முத்திரையிட்டு வாக்கைப் பதிவு செய்தல் அல்லது (தீர்மானம் போன்றவற்றிற்காக ஆதரவையோ எதிர்ப்பையோ தெரிவிக்கும் வகையில்) கைதூக்குதல், குரலெழுப்புதல் முதலிய முறைகளில் வாக்கைப் பதிவுசெய்தல்.

  ‘வாக்களித்ததன் அடையாளமாக வாக்காளரின் விரலில் எளிதில் அழியாத மையிடுவார்கள்’
  ‘இப்போது வாக்களிக்கும் வயது பதினெட்டு’
  ‘சங்கத் தேர்தலில் என்னை ஆதரித்துக் கோடாலி சின்னத்துக்கு வாக்களியுங்கள்!’
  ‘ஐக்கிய நாடுகள் சபையில் பல மூன்றாம் உலக நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன’

 • 2

  (ஒன்றைச் செய்வதாக ஒருவருக்கு) உறுதியளித்தல்; வாக்குறுதி தருதல்.

  ‘முதல் உலகப்போரின்போது இந்தியாவுக்குச் சுயாட்சி தருவதாக இங்கிலாந்து வாக்களித்தது’
  ‘இந்தக் காரியத்தைச் செய்து முடித்தால் நிறைய பணம் தருவதாக அவர் எனக்கு வாக்களித்தார்’