தமிழ் வாக்கு யின் அர்த்தம்

வாக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைச் செய்கிறேன், செய்ய மாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும்) உறுதி அளிக்கும் பேச்சு.

  ‘எப்படியும் பணம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு இப்போது விழிக்கிறார்’
  ‘அவர் வாக்குத் தவற மாட்டார்’

 • 2

  (ஒருவரால்) சொல்லப்பட்டு மதிக்கப்படுவது.

  ‘தெய்வ வாக்கு’
  ‘பெரியோர் வாக்கு’

தமிழ் வாக்கு யின் அர்த்தம்

வாக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப் பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில்) குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.

 • 2

  மேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் விதத்தில் முத்திரை குத்தப்படும் சீட்டு.

  ‘தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும்’

 • 3

  மேற்குறிப்பிட்ட சீட்டில் குறிப்பிட்ட சின்னத்தில் முத்திரையிடுவதன் மூலம் ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ தெரிவிக்கும் ஆதரவு.

  ‘தொழிற்சங்கத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முத்தையன் வெற்றி பெற்றார்’
  ‘உங்கள் வாக்கு எங்களுக்கே!’
  ‘வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்’