தமிழ் வாக்குவாதம் யின் அர்த்தம்

வாக்குவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு விஷயம்குறித்து) வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் காரசாரமான பேச்சு.

    ‘பாதுகாப்புப் படையினருக்கும் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது’
    ‘உன்னோடு வாக்குவாதம் செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை’
    ‘வாக்குவாதம் செய்வதை நிறுத்திவிட்டு வேலையைப் பாருங்கள்’