தமிழ் வாகனம் யின் அர்த்தம்

வாகனம்

பெயர்ச்சொல்

 • 1

  பிராணிகளால் இழுக்கப்பட்டு அல்லது இயந்திரத்தால் இயக்கப்பட்டு மனிதர்களை அல்லது பொருள்களை ஏற்றிக்கொண்டு செல்லும் சாதனம்; ஊர்தி.

  ‘சாலையில் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைத்தது’
  ‘அவருடைய வாகனம் மாட்டு வண்டிதான்’

 • 2

  (புராணத்தில் கடவுள், தேவர் ஆகியோர்) ஏறி அமர்ந்து செல்வதற்கு உரியது.

  ‘கருட வாகனம்’
  ‘ரிஷப வாகனம்’

 • 3

  (உற்சவத்தின்போது கடவுள் விக்கிரகத்தை வைத்து ஊர்வலமாக எடுத்து வரப் பயன்படுத்தும்) தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தால் பெரிதாகச் செய்யப்பட்ட பொம்மை.

  ‘கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு’
  ‘காளை வாகனத்தில் தியாகராஜர் பவனி’
  ‘மயில் வாகனம்’
  ‘ஆட்டுக்கிடா வாகனம்’