தமிழ் வாக்கில் யின் அர்த்தம்

வாக்கில்

இடைச்சொல்

 • 1

  ‘(குறிப்பிடப்படும்) நிலையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நின்றவாக்கில் பேசிவிட்டுப் போய்விட்டான்’
  ‘வேட்டியை நீளவாக்கில் மடி’

 • 2

  ‘(துல்லியமாக இல்லாமல் குறிப்பிடப்படும்) நேரத்தை அல்லது காலத்தை ஒட்டி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அப்பா ஐந்து மணிவாக்கில் வீடு திரும்புவார்’
  ‘தேர்தல் மே மாதவாக்கில் நடைபெறும்’