தமிழ் வாசனை யின் அர்த்தம்

வாசனை

பெயர்ச்சொல்

 • 1

  மணம்.

  ‘வாசனை மிகுந்த மலர்கள்’
  ‘அடுக்களையிலிருந்து ஏதோ கருகும் வாசனை வந்தது’
  ‘தாள் மக்கிப் போன வாசனை’
  ‘எங்கோ தூரத்தில் மழை பெய்வதால் மண்ணின் வாசனை காற்றில் மிதந்து வந்தது’
  ‘இந்த இலையில் கற்பூர வாசனை வருகிறது’
  ‘வாசனையை உணரும் புலன் மூக்கு’
  ‘ரசத்தில் கொத்தமல்லி வாசனை தூக்கலாக இருந்தது’
  ‘வெங்காயம் வதக்கும் வாசனை’

 • 2

  (படிப்பு, கல்வி முதலியவை ஒருவரிடம் இருப்பதற்கான) அடையாளம்.

  ‘படிப்பு வாசனை இல்லாவிட்டாலும் அனுபவத்தால் எல்லாம் தெரிந்தவர்’