தமிழ் வாசஸ்தலம் யின் அர்த்தம்

வாசஸ்தலம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு வசிக்கும் இடம்.

  ‘அந்தக் குப்பை மேடு பன்றிகளின் வாசஸ்தலமாகிவிட்டது’

 • 2

  கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை கொண்டதாக அமைந்திருக்கும் (பெரும்பாலும் மலைப் பகுதியில் உள்ள) இடம்.

  ‘ஊட்டி ஒரு சிறந்த கோடை வாசஸ்தலமாகும்’
  ‘மலை வாசஸ்தலம்’