வாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசி1வாசி2வாசி3வாசி4வாசி5

வாசி1

வினைச்சொல்வாசிக்க, வாசித்து

 • 1

  (புத்தகம் முதலியவற்றை) படித்தல்.

  ‘கடிதத்தைத் திரும்பத்திரும்ப வாசித்தார்’
  ‘பாடத்தை நன்றாகச் சத்தம்போட்டு வாசி’
  ‘இந்தக் கதையை எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்காது’
  ‘வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது’
  ‘காலையில் குளித்துவிட்டு அப்பா திருவாசகம் வாசிப்பார்’
  ‘மனத்தில் பதியும் வண்ணம் பாடத்தை வாசிக்க வேண்டும்’

 • 2

  (தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் செய்திகளைப் பிறருக்குத் தெரிவிக்கும் வகையில் சத்தமான குரலில்) படித்தல்.

  ‘செய்தி வாசிப்பவரின் உச்சரிப்பு மோசமாக இருந்தது’
  ‘‘செய்திகள் வாசிப்பது சுந்தரம்’ என்று கம்பீரமான குரலில் அவர் செய்திகளை ஆரம்பித்தார்’

 • 3

  அருகிவரும் வழக்கு கல்வி கற்றல்.

  ‘நாங்கள் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக வாசித்திருக்கிறோம்’
  ‘கல்லூரியில் வாசிக்கிற பெண்கள்’

வாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசி1வாசி2வாசி3வாசி4வாசி5

வாசி2

வினைச்சொல்வாசிக்க, வாசித்து

 • 1

  (இசைக் கருவியை) முறைப்படி இசைத்தல்.

  ‘இவள் நன்றாக வீணை வாசிப்பாள்’
  ‘மிருதங்கம் வாசிக்கும் இளைஞன் யார்?’
  ‘எனக்குப் புல்லாங்குழல், மிருதங்கம் இரண்டும் வாசிக்கத் தெரியும்’

வாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசி1வாசி2வாசி3வாசி4வாசி5

வாசி3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அருமையான வாய்ப்பு; அதிர்ஷ்டம்.

  ‘நல்ல இடத்தில் கல்யாணம் வந்திருக்கிறது. உங்களுக்கு வாசிதான்’
  ‘ஆஸ்பத்திரி பக்கத்திலேயே வந்துவிட்டால் நமக்கு வாசிதான்’

வாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசி1வாசி2வாசி3வாசி4வாசி5

வாசி4

பெயர்ச்சொல்

 • 1

  (பெயர்ச்சொற்களோடு இணைந்து வரும்போது) (முன்குறிப்பிடப்படும் இடத்தில்) வசிப்பவர் அல்லது இருப்பவர்.

  ‘நகரவாசி’
  ‘குடிசைவாசி’
  ‘கல்கத்தாவாசி’

வாசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசி1வாசி2வாசி3வாசி4வாசி5

வாசி5

பெயர்ச்சொல்

 • 1

  (‘கால்’, ‘அரை’, ‘முக்கால்’ என்ற சொற்களோடு இணைந்து) ‘பகுதி’ என்ற பொருளில் வரும் ஒரு சொல்.

  ‘கட்டுரையில் முக்கால்வாசி எழுதி முடித்துவிட்டேன்’
  ‘நீ சொல்வதில் கால்வாசிதான் புரிகிறது’
  ‘நாவல் கால்வாசியில் நிற்கிறது’