தமிழ் வாசிப்பு யின் அர்த்தம்

வாசிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (நூல் முதலியவற்றை) கற்பதற்காக வாசித்தல்.

  ‘வாசிப்பில் கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்க்கிறாயா?’

 • 2

  (தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் செய்திகளை) உரக்கப் படித்தல்.

  ‘அவருடைய செய்தி வாசிப்புப் பலருக்குப் பிடிக்கும்’

 • 3

  குறிப்பிட்ட பார்வையில் ஒரு பிரதியை அணுகும் முறை.

  ‘எனது வாசிப்பில் இது ஒரு கற்பனாவாதப் படைப்பாகத்தான் தோன்றுகிறது’

தமிழ் வாசிப்பு யின் அர்த்தம்

வாசிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  இசைக் கருவிகளை வாசிக்கும் செயல்.

  ‘இன்று கச்சேரியில் அவருடைய மிருதங்க வாசிப்பு மிகவும் பிரமாதம்’