தமிழ் வாட்டு யின் அர்த்தம்

வாட்டு

வினைச்சொல்வாட்ட, வாட்டி

 • 1

  (இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக) எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேகவைத்தல்.

  ‘சோளக்கதிரை வாட்டி உதிர்த்துத் தின்றார்கள்’
  ‘மசாலா தடவிய கோழிக்கறியைத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தான்’

 • 2

  (கவலை, வறுமை போன்றவை) வருத்துதல்.

  ‘வறுமை வாட்டியபோதும் திடமாக இருந்தார்’
  ‘தனிமைதான் என்னை வாட்டுகிறது’
  ‘காலையில் கண் விழித்தபோது பசி அவனை வாட்டியது’
  ‘மூட்டு வலி என்பது முதுமையில் வாட்டும் நோய்’