தமிழ் வாடி யின் அர்த்தம்

வாடி

பெயர்ச்சொல்

  • 1

    வட்டார வழக்கு விறகு, மரம் முதலியவை விற்கும் இடம்; மரவாடி.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (மீனவர்களோ விவசாயிகளோ) தங்கியிருக்கவும் பொருள்களை வைக்கவும் கட்டும் குடிசை.

    ‘வயலில் அறுவடை முடியும்வரை வாடியிலேதான் தங்கியிருந்தார்கள்’
    ‘கடற்கரையில் உலர்த்திய மீனை வாடியில் சேர்த்துவைப்பார்கள்’