தமிழ் வாடிக்கை யின் அர்த்தம்

வாடிக்கை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வழக்கமாகச் செய்துவருவது.

  ‘வாடிக்கையான கடையில் வாங்காமல் வேறு கடையில் ஏன் வாங்கினாய்?/ வாடிக்கையாக அந்த விடுதியில்தான் சாப்பிடுவார்./’
  ‘பொய்ச் செய்திகளை வெளியிடுவதே இந்தப் பத்திரிகையின் வாடிக்கை’
  ‘எங்கள் பக்கம் இப்படிச் சடங்கு செய்வதுதான் வாடிக்கை’
  ‘ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியருக்கு விருந்து அளிப்பது எங்கள் பள்ளியின் வாடிக்கை’
  ‘இது எங்கள் வீட்டில் நடக்கும் அன்றாட வாடிக்கை’

 • 2

  (கடை போன்றவற்றில் வைத்துக்கொள்ளும்) கணக்கு.

  ‘புது வீட்டுக்குக் குடிவந்ததும் எதிர் வீட்டில் பால் வாடிக்கை வைத்துக்கொண்டார்’

 • 3

  பேச்சு வழக்கு வாடிக்கையாளர்.

  ‘காலையிலிருந்து எந்த வாடிக்கையும் வரவில்லை’