வாடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாடை1வாடை2

வாடை1

பெயர்ச்சொல்

 • 1

  (வடக்கிலிருந்து வீசும்) குளிர்காற்று.

  ‘வெளியே வாடை தாங்காமல் உள்ளே வந்து படுத்துக்கொண்டான்’
  ‘ஆளை நடுங்கவைக்கும் வாடை’
  ‘வாடைக் காற்று வீசுவதால் எங்கோ மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்’

 • 2

  (பெரும்பாலும்) மனத்துக்குப் பிடிக்காத, அருவருப்பூட்டும் வாசனை.

  ‘விளக்குத் திரி தீய்ந்த வாடை அடிக்கிறது’
  ‘மூடிக்கிடந்த அறைக்குள்ளிருந்து பிணவாடை அடித்ததால் காவலர்களை வரவழைத்தனர்’
  ‘பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடமிருந்து சாராய வாடை’

 • 3

  குறிப்பிட்ட தன்மையை வெளிக்காட்டும் அடையாளம்.

  ‘அரசியல் வாடை கலந்த கதை’
  ‘மனித வாடையற்ற தீவு’
  ‘அவர் தமிழராக இருந்தாலும் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை பார்த்ததால் அவர் பேச்சில் ஆங்கில வாடை வீசும்’

வாடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாடை1வாடை2

வாடை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (தெருவின்) இரண்டு பக்கங்களில் ஒன்று.

  ‘இதே வாடையில் சென்றால் கடைசியில் கோயில் வரும்’
  ‘எதிர் வாடையில்தான் என் வீடு இருக்கிறது’