தமிழ் வாத்தியார் யின் அர்த்தம்

வாத்தியார்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்; குறிப்பிட்ட கலையைப் பயிற்றுவிப்பவர்; குரு.

  ‘கணக்கு வாத்தியார்’
  ‘எனக்குச் சிலம்பம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் இவர்தான்’
  ‘பாட்டு வாத்தியார்’

 • 2

  சமூக வழக்கு
  புரோகிதர்.

  ‘வாத்தியார் வந்ததும் காரியத்தை ஆரம்பித்துவிடலாம்’