தமிழ் வாதாடு யின் அர்த்தம்

வாதாடு

வினைச்சொல்வாதாட, வாதாடி

 • 1

  (ஒரு நிலைப்பாட்டை நிறுவுவதற்காக) காரணங்களை எடுத்துச்சொல்லுதல்; தர்க்கம்செய்தல்.

  ‘இந்த வீட்டை விற்கக் கூடாது என்று அப்பாவிடம் எவ்வளவோ வாதாடினேன்’
  ‘நீ செய்வதெல்லாம் நியாயம் என்று வாதாடாதே’

 • 2

  (நீதிமன்றத்தில் ஒருவர் சார்பில்) சட்டரீதியாக விவாதித்தல்.

  ‘என் தரப்பில் வாதாட வழக்கறிஞரை அமர்த்திவிட்டேன்’