தமிழ் வானளாவ யின் அர்த்தம்

வானளாவ

வினையடை

  • 1

    (புகழ்தல், பாராட்டுதல் போன்றவை குறித்து வரும்போது) மிகவும் அதிகமாக; அளவுக்கு அதிகமாக.

    ‘இந்த வருட நிதிநிலை அறிக்கையைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வானளாவப் புகழ்ந்தனர்’
    ‘நீங்கள் வானளாவப் புகழும் அளவுக்கு இந்த நாவலில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை’