தமிழ் வானொலி யின் அர்த்தம்

வானொலி

பெயர்ச்சொல்

 • 1

  தகவல்களை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வழியே அனுப்பும் முறை.

 • 2

  குறிப்பிட்ட சாதனத்தின் மூலம் மக்கள் கேட்பதற்காக மேற்சொன்ன விதத்தில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் முறை.

  ‘சென்னை வானொலி நிலையம்’
  ‘இது இலங்கை வானொலி நிலையத்தின் தமிழ்ச் சேவை’

 • 3

  வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படுவதை வாங்கி ஒலியாக மாற்றும் கருவி.

  ‘வானொலியிலிருந்து நாகசுர இசை கேட்டுக்கொண்டிருந்தது’
  ‘வானொலிச் சத்தம் காதைக் கிழித்தது’