தமிழ் வாபஸ் பெறு யின் அர்த்தம்

வாபஸ் பெறு

வினைச்சொல்பெற, பெற்று

 • 1

  (போட்டி முதலியவற்றிலிருந்து) விலகுதல்.

  ‘கடைசி நேரத்தில் அந்த வீரர் இருநூறு மீட்டர் பந்தயத்திலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டார்’
  ‘வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளைதான் கடைசி நாள்’
  ‘தான் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் அறிவித்தார்’

 • 2

  (முறைப்படி அறிவித்த ஒன்றை அல்லது வழக்கு போன்றவற்றை) திரும்பப்பெறுதல்.

  ‘தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றாலொழிய பேச்சுவார்த்தை சாத்தியம் இல்லை என்கிறார்கள்’
  ‘போராட்டக் காலத்தில் தங்கள் மீது விதிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்’

 • 3

  (பொருளையோ பணத்தையோ) திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்.

  ‘அந்தக் கடையில் எந்த ஒரு பொருளையும் வாபஸ் பெற மாட்டார்கள்’
  ‘தைலம் வலியைப் போக்காவிட்டால் உங்கள் பணத்தை நீங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்’

 • 4

  (அனுப்பிய படைகளை) திரும்ப வருமாறு செய்தல்.

  ‘ஆக்கிரமித்த இடங்களிலிருந்து படைகளை அந்த நாடு வாபஸ் பெற வேண்டும்’