தமிழ் வாய்ப்பட்ட யின் அர்த்தம்

வாய்ப்பட்ட

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிட்ட ஒன்றின் தாக்கம், பாதிப்பு போன்றவற்றுக்கு) ஆளான அல்லது உள்ளான.

    ‘காதல் வாய்ப்பட்டவனின் புலம்பல்களாக இக்கவிதையைக் கவிஞர் அமைத்துள்ளார்’
    ‘வறுமை வாய்ப்பட்டவர்களுக்கு மீட்சியளிப்பதுதான் எங்களின் நோக்கம் என்றார் அவர்’